Ad Code

Responsive Advertisement

1 ரூபாய் இட்லி பாட்டிக்கு புதிய வீடு வழங்கிய மஹிந்திரா நிறுவனம்

 




கோவையில் 1 ரூபாய் இட்லி மூலம் கவனம் பெற்ற மூதாட்டி கமலாத்தாளுக்காக மஹிந்திரா நிறுவனம் சார்பில் கட்டப்பட்ட புதிய வீட்டை இன்று அவரிடம் ஒப்படைத்தனர்.


கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் அருகே உள்ள ஆலாந்துறை வடிவேலாம்பாளையத்தை சேர்ந்தவர் கமலாத்தாள் பாட்டி(85). இவர், ஒரு ரூபாய்க்கு இட்லி விற்று வருகின்றார்.


உதவிக்கு யாரும் இல்லாமல் தனி ஆளாக 30 வருஷமாக இந்த இட்லி கடை நடத்தி வருகிறார். அவரே இட்லி, சட்னி, சாம்பார் தயாரித்து விற்பனை செய்து வருகின்றார்.


ஆரம்பத்தில் ஒரு இட்லி 25 பைசாவுக்கு விற்ற நிலையில் அதை ஒரு ரூபாயாக விலையை உயர்த்தி விற்பனை செய்து வருகின்றார்.


சுற்றுவட்டார கிராமங்களில் உள்ள ஏழை, எளிய மக்கள் ஏராளமானோர் தினமும் இந்த கடைக்கு வந்து சென்ற நிலையில் பாட்டி பிரபலமடைந்தார்.


இந்நிலையில், ஒரு ரூபாய்க்கு இட்லி விற்பனை செய்து வரும் கமலாத்தாள் பாட்டியின் சேவையை அறிந்த மஹிந்திரா குழுமத் தலைவர் ஆனந்த் மஹிந்திரா, கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் அவரை தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டு வாழ்த்தியிருந்தார்.


விறகு அடுப்புக்கு மாற்றாக சமையல் எரிவாயு அடுப்பு, கிரைண்டர், மிக்சி, ஆகியவற்றை கமலாத்தாளுக்கு ஆனந்த் மஹேந்திரா வழங்கினார்.


இதனைத் தொடர்ந்து பாரத்கேஸ் மாதம் தோறும் இரண்டு சிலிண்டர்களையும், ஹெச் பி கேஸ் ஒரு சிலிண்டரையும் கமலாத்தாள் பாட்டிக்கு வழங்கி வருகின்றனர்.


மஹிந்திரா குழுமம் தற்போது பாட்டிக்கு வீடு கட்டி கொடுத்து உள்ளது. கடந்த ஜனவரி மாதம் 28ம் தேதியன்று 7 லட்சம் செலவில் பூமி பூஜை போட்டு தொடங்கியது. இந்த கட்டுமான பணிகள் கடந்த 5ம் தேதி நிறைவு பெற்றது.


இந்நிலையில், மஹிந்திரா குழுமத்தின் திருப்பூர் முதன்மை செயல் அதிகாரி இட்லி பாட்டி கமலாத்தாளிடம் புதிதாக கட்டப்பட்ட வீட்டிற்கான அன்னையர் தினத்தை முன்னிட்டு சாவியை வழங்கினார்.


இதனை மஹிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா தனது டுவிட்டர் பக்கத்தில் நெகிழ்ச்சியோடு பகிர்ந்துள்ளார்.




Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement