Ad Code

Responsive Advertisement

கிடார் வாசித்து சினிமா பாடலை பாடி டுவிட்டரில் பதிவிட்ட கலெக்டர்

 




தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜூன் நடிப்பில் புஷ்பா திரைப்படம் கடந்த நவம்பர் மாதம் தெலுங்கு, கன்னடம், தமிழ், இந்தி உட்பட 5 மொழிகளில் வெளியாகியது. இந்த திரைப்படத்தின் பாடல்கள் தமிழ், தெலுங்கில் பிரபலமாகியது. இதில், தமிழில் பார்வை கற்பூர தீபமா? பேச்சே கல்யாணி ராகமா? என்ற பாடல் தெலுங்கில் பங்கார மாயனே ஸ்ரீ வள்ளி என தொடங்கும். இந்த பாடலை பாடகர் சித்ஸ்ரீராம் பாடியுள்ளார்.


கரூர் கலெக்டர் பிரபு சங்கர் கிடார் இசைத்த வண்ணம் இந்த பாடலை தெலுங்கில் பாடி 1.39 நிமிடம் கொண்ட காணொலியை ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும், அந்த ட்விட்டரில், கடைசியில் நானும்  வள்ளி பாடலை இசைத்துள்ளேன். நான் இம்மொழியை பேசுவதில்லை. இதனால், தெலுங்கு பேசுபவர்கள் மற்றும் தெலுங்கு பாடகர்களிடம் தவறுகளுக்கு மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் என அதில் தெரிவித்துள்ளார்.





Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement