Ad Code

Responsive Advertisement

வகுப்பறையில் மதுபானம் அருந்திய கல்லூரி மாணவிகள்

 




கல்லூரி வகுப்பறையில் முதலாம் ஆண்டு கல்லூரி மாணவிகள் மது அருந்தும் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.


தமிழகம் முழுவதும் கடந்த சில மாதங்களாக பள்ளி மாணவிகள் மற்றும் கல்லூரி மாணவிகள் மது அருந்தும் காட்சி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. தற்போது, காஞ்சிபுரம் அடுத்துள்ள ஏனாத்தூரில் உள்ள தனியார் கலைக் மற்றும் அறிவியல் கல்லூரியில் B.B.A முதலாம் ஆண்டு படிக்கும் மாணவிகள், வகுப்பறையில் மேஜை மேல் அமர்ந்துகொண்டு வெளிமாநில மதுவை குளிர்பானத்தில் கலந்து அருந்தும் காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.


காஞ்சிபுரம் அடுத்த ஏனாத்தூர் பகுதியில் இயங்கி வரும் தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பல்வேறு பகுதியிலிருந்து பயின்று வருகின்றனர். காஞ்சிபுரத்தில் மிகப்பிரபலமான கல்லூரியாக இந்த கல்லூரி விளங்குகிறது.


கடந்த ஒரு வாரத்துக்கு மேலாக கல்லூரி மாணவிகள் மதுபானம் அருந்தும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வந்ததால், கல்லூரியின் முதல்வர் கவனத்திற்கு இந்த விஷயம் சென்றது. இந்த வீடியோவில் மதுபானம் அருந்தும் கல்லூரி மாணவிகளிடம் கல்லூரியின் முதல்வர் விசாரணை செய்ததில், அதே வகுப்பறையில் படிக்கும் மாணவன் ஒருவன் மதுபானத்தை வாங்கி வந்ததாகவும், மது என்று தெரிந்தே மாணவிகள் அருந்தியதாகவும் மாணவிகள் ஒப்புக்கொண்டனர்.


மதுபானம் அருந்திய கல்லூரி மாணவ, மாணவிகளின் பெற்றோர்களை அழைத்து கல்லூரியின் முதல்வர் கண்டித்தது மட்டுமல்லாமல், ஒரு மாணவன் உட்பட 5 மாணவிகளை தற்காலிகமாக சஸ்பெண்ட் செய்தார். இனி இது போல் நடைபெறாமல் இருப்பதாக மாணவ, மாணவிகளின் பெற்றோர்கள் உறுதி அளித்துள்ளார்கள்.


சமூக வலைதளங்களில் மாணவிகளே இதுபோல் மதுவை அருந்தும் வீடியோ சமீபகாலமாக வைரலாக பரவி வருகிறது. இதனால் பல்வேறு தரப்புகளில் இருந்து மாணவிகளுக்கு எதிரான கருத்துக்களும் முன் வைக்கப்படுவதாக சமூக ஆர்வலர்கள் வேதனைப்பட்டனர்.




Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement