காரியாபட்டி அருகே, கழுவனசேரி அரசு உயர்நிலைப்பள்ளியில் காவல்துறை சார்பில், குற்றங்களில் இருந்து எவ்வாறு விடுபட வேண்டும் என மாணவர்களுக்கு விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.பள்ளி தலைமையாசிரியர் தலைமை வகித்தார். இதில், காரியாபட்டி எஸ்.ஐ அசோக்குமார், ஆனந்தஜோதி ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில், ‘பள்ளி மாணவர்கள் படிப்பில் முழு கவனம் செலுத்த வேண்டும். சிறிய தவறு செய்யும்போது படிப்பு வீணாகும்.
மாணவர்கள் செய்யும் தவறுகளுக்கு காவல்துறை வழக்குபதிவு செய்யும் சூழ்நிலை ஏற்பட்டால், எதிர்காலமே கேள்விக்குறியாகும். இதனால், அரசு வேலை கிடைப்பதிலும் பாதிப்பு ஏற்படும். மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்தினால், அரசின் பல்வேறு துறைகளில் பணிபுரியும் வாய்ப்பு கிடைக்கும்.
செல்போன் பார்ப்பதை மாணவர்கள் தவிர்க்க வேண்டும். செல்போன் மாணவர்களை சீரழிக்கும் வேலையை செய்து வருகிறது. போக்சோ சட்டம், குழந்தை திருமணம், சமூக ஊடகங்கள் பயன்பாட்டு முறை, போதைப்பொருள் பழக்கத்தால் ஏற்படும் தீமை ஆகியவை குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதில் குழந்தை நல சிறப்பு அலுவலர் பார்வதி மற்றும் ஆபிரியர் முனியாண்டி உட்பட பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.
0 Comments