"படிக்காததால்தான், நாங்க அரசியல்வாதி ஆகிவிட்டோம்" என்று மதுரை மருத்துவக் கல்லூரி முதலாம் ஆண்டு எம்பிபிஎஸ் மாணவர்கள் வரவேற்பு விழாவில் வணிக வரித் துறை அமைச்சர் பி.மூர்த்தி பேசியதால் விழா அரங்கே சிரிப்பலையால் அதிர்ந்தது.
மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் முதலாம் ஆண்டு எம்பிபிஎஸ் மாணவ, மாணவிகளை வரவேற்கும் விழா இன்று நடந்தது. நிதியமைச்சர் பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன், முதலாம் ஆண்டு எம்பிபிஎஸ் மாணவ, மாணவிகளுக்கு ‘மருத்துவர் கோட்’ அணிவித்து வரவேற்று வாழ்த்து தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து ஆட்சியர் அனீஸ் சேகர் பேசுகையில், "மதுரை மருத்துவக் கல்லூரி தமிழகத்தின் இரண்டாவது பெரிய கல்லூரி. அத்தகைய பெருமைமிகு இந்தக் கல்லூரியில் படிக்க இடம் பிடித்தது மாணவர்களுக்கு கிடைத்த அதிர்ஷ்டம்.
0 Comments