''மஞ்சப்பை எக்ஸ்பிரஸ் ரயில் கண்காட்சி, 13 கோடி ரூபாய் மதிப்பீட்டில், இந்திய ரயில் உணவு மற்றும் சுற்றுலா கழகத்துடன் இணைந்து செயல்படுத்தப்படும்,'' என, சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்தார்.
அவர் வெளியிட்ட அறிவிப்புகள்:
l மாநிலத்தில் 25 பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டு, தலா 20 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், மாணவர்கள் வாயிலாக 'சோலார் பம்ப்' மற்றும் மழைநீர் சேகரிப்பு, மக்கும் உரம் தயாரிப்பு, காய்கறி தோட்டம் உருவாக்குதல், நீர் பயன்பாட்டை குறைத்தல், கழிவுநீரை மறுசுழற்சி செய்தல், பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்த்தல் உள்ளிட்டவை அடங்கிய, பசுமை பள்ளி திட்டம் செயல்படுத்தப்படும்l
தமிழக காலநிலை மாற்ற இயக்கத்தை வலுப்படுத்தும் வகையில், 3.80 கோடி ரூபாய் மதிப்பீட்டில், மாவட்ட அளவிலும் அது ஏற்படுத்தப்படும்l மஞ்சப்பை எக்ஸ்பிரஸ் ரயில் கண்காட்சி, 13 கோடி ரூபாய் மதிப்பீட்டில், இந்திய ரயில் உணவு மற்றும் சுற்றுலா கழகத்துடன் இணைந்து செயல்படுத்தப்படும்
l தமிழகத்தில் உள்ள தொழிற்சாலைகளை, மாசு கட்டுப்பாட்டு வாரியம் வாயிலாக, பசுமை மதிப்பீடு செய்யும் பணிகள், 2.50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்.l பிளாஸ்டிக் பயன்பாடில்லாத வளாகங்களை உருவாக்கும் பள்ளி, கல்லுாரிகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு முதல் பரிசாக 10 லட்சம் ரூபாய், இரண்டாவது பரிசாக 5 லட்சம் ரூபாய், மூன்றாவது பரிசாக 3 லட்சம் ரூபாய் வழங்கப்படும்.
இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.
0 Comments