Ad Code

Responsive Advertisement

மாணவரை அடித்த ஆசிரியர் 'சஸ்பெண்ட்'

 


 மாணவரை அடித்த ஆசிரியர், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.


விருதுநகர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஞானகவுரி கூறியதாவது:

சத்திரரெட்டியபட்டி அரசு மேல்நிலைப் பள்ளி முதுகலை விலங்கியல் ஆசிரியரான வேல்முருகன் மார்ச் 3ல் நடந்த பொது மாறுதல் கலந்தாய்வில் குழப்பத்தை ஏற்படுத்தினார். பின், போலீஸ் உதவியுடன் கலந்தாய்வு நடத்தப்பட்டது.திருப்புதல் தேர்வில் வினாத்தாள் பற்றாக்குறையை, பொதுத்தேர்வு வினாத்தாள் பற்றாக்குறை எனக் கூறி பதற்றத்தை உருவாக்கினார். சக ஆசிரியையை, மாணவர்கள் முன்னிலையில் அவமதித்துள்ளார். இவற்றுக்கு விளக்கம் அளிக்க மார்ச் 22ல் 'மெமோ' அனுப்பப்பட்டது. அவர் உரிய பதில் தரவில்லை.அவர், வகுப்பில் மாணவரை தாக்கியதில் கண்ணில் காயம் ஏற்பட்டது. இது தொடர்பாக மேலதிகாரிகள் கேட்டதற்கும் உரிய பதில் அளிக்கவில்லை. இதனால் அவர் 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.இவ்வாறு அவர் கூறினார்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement