Ad Code

Responsive Advertisement

ஆசிரியர் தகுதி தேர்வு பதிவு அவகாசம் நீட்டிக்க கோரிக்கை!

 




ஆசிரியர் தகுதி தேர்வுக்கான விண்ணப்ப பதிவு அவகாசம் நாளை மறுநாள் முடிகிறது. அவகாசத்தை நீட்டிக்க, பட்டதாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்


.மத்திய அரசின் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி, ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையில் ஆசிரியர்களாக பணியாற்ற விரும்பும் பட்டதாரிகள், ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டியது கட்டாயம். இந்த தேர்வை ஒவ்வொரு மாநிலமும் ஆண்டுக்கு இரண்டு முறை நடத்த வேண்டும்.இந்த ஆண்டுக்கான தகுதி தேர்வை, ஆசிரியர் தேர்வு வாரியான டி.ஆர்.பி., மார்ச் 7ல் அறிவித்தது. தேர்வுக்கான விண்ணப்ப பதிவு மார்ச் 14ல் துவங்கியது; வரும் 13ம் தேதியான நாளை மறுநாள் முடிகிறது. 


தேர்வு எழுத விரும்புவோர், இன்னும் இரண்டு நாட்களுக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.இந்நிலையில், தேர்வுக்கு விண்ணப்பிக்கும் அவகாசத்தை நீட்டிக்க கோரிக்கை எழுந்துள்ளது. பி.எட்., படித்த 50 ஆயிரம் பேருக்கு தேர்வு முடிவுகள் வர வேண்டியுள்ளது. அவர்களும், ஆசிரியர் தகுதி தேர்வை எழுத வசதியாக, விண்ணப்ப பதிவுக்கான அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என, பட்டதாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். 


கட்டாய கல்வி உரிமை சட்டம் தமிழகத்தில் அமலான பின், தமிழக பள்ளிக்கல்வி துறையில் சேர்ந்த ஆசிரியர்கள் பலர், ஆசிரியர் தகுதி தேர்வை எழுதி தேர்ச்சி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். எனவே, அவர்களும் தேர்வுக்கு விண்ணப்பிக்க வகையில், விண்ணப்ப காலத்தை நீட்டிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement