Ad Code

Responsive Advertisement

ஆண்டுக்கு 6 கிராம சபை கூட்டங்கள் நடத்தப்படும் - மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

 





சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது:-


 திமுக ஆட்சியமைக்கும் போதெல்லாம் உள்ளாட்சி அமைப்புகளுக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, நவம்பர் 1ஆம் தேதி உள்ளாட்சி நாளாக மீண்டும் கொண்டாடப்படும். கடைசியாக 2010ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் உள்ளாட்சி நாள் கொண்டாடப்பட்டது.


தமிழகத்தில் இன்று ஆண்டுக்கு 4 கிராம சபைக் கூட்டங்களுக்கு பதிலாக 6 கிராம சபை கூட்டங்கள் நடத்தப்படும். ஜனவரி 22, மே 1, ஆகஸ்ட் 15, அக்டோபர் 2ஆம் தேதி, மார்ச் 22ஆம் தேதி (தண்ணீர் தினம்), நவம்பர் 1 ஆம் தேதி என ஆண்டுதோறும் 6 நாள்கள் கிராம சபைக் கூட்டங்கள் நடத்தப்படும்.


உள்ளாட்சி என்பது மக்களாட்சியின் ஆணிவேர். ஊராட்சித் தலைவர்கள், உறுப்பினர்களுக்கான அமர்வுப் படித்தொகை 5 மடங்கு உயர்த்தப்படும். அனைத்து ஊராட்சி ஒன்றிய குழு தலைவர்களுக்கும் புதிய வாகனங்கள் வழங்கப்படும்.


உள்ளாட்சி உறுப்பினர்களுக்கு அமர்வுப்படி 10 மடங்கு உயர்த்தப்படும்.  சிறப்பாக செயல்படக்கூடிய கிராம ஊராட்சிகளுக்கு உத்தமர் காந்தி விருது நடப்பு ஆண்டு முதல் மீண்டும் வழங்கப்படும்.


நவம்பர் 1ஆம் தேதி உள்ளாட்சிகள் தினமாக கொண்டாடப்படும். கிராமங்களை வலிமைப்படுத்த உள்ளாட்சி அமைப்புகளுக்கு போதிய அதிகாரம் வழங்க வேண்டும். 


இவ்வாறு அவர் கூறினார். 

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement