Ad Code

Responsive Advertisement

தமிழகத்தில் 5 இடங்களில் 102 டிகிரி வெயில்




தமிழகத்தில் 5 இடங்களில் நேற்று 102 டிகிரி வெயில் கொளுத்தியது. பிற மாவட்டங்களில் சராசரியாக 100 டிகிரி வெயில் நிலவியது. தமிழகத்தில் தற்போது கோடைவெயில் காரணமாக மலைப்பகுதியை சேர்ந்த மாவட்டங்கள் தவிர பிற மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. 


வெப்ப சலனத்தால் சில மாவட்டங்களில் லேசான மழையும் பெய்து வருகிறது. அதன்படி சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி, தர்மபுரி, ராமநாதபுரம், தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதி மாவட்டங்கள் மற்றும் அதை ஒட்டிய ஈரோடு, கரூர், திண்டுக்கல் மாவடடங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்தது. அதன் தொடர்ச்சியாக வெப்ப சலன வளி மண்டல கீழடுக்கு சுழற்சியால் மேற்கண்ட பகுதிகளில் இன்றும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும். 


இதற்கிடையே, கத்திரி வெயில் தொடங்க இன்னும் ஒரு வாரம் உள்ள நிலையில், தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. கரூர், மதுரை, திருச்சி, திருத்தணி, வேலூர் மாவட்டங்களில் நேற்று அதிகபட்சமாக 102 டிகிரி வெயில் கொளுத்தியது. ஈரோடு, தஞ்சாவூர், சென்னை, தர்மபுரி, பாளையங்கோட்டை, சேலம்,  உள்ளிட்ட மாவட்டங்களில் 100 டிகிரி வெயில் நிலவியது. இதே நிலை மேலும் நீடிக்கும்.






 

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement