Ad Code

Responsive Advertisement

“தமிழ்நாடு ஏழை மாநிலம் அல்ல... வளர்ந்த மாநிலம்...': புள்ளி விவரங்களை அடுக்கி நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் விளக்கம்..!!

 


தமிழ்நாடு ஏழை மாநிலம் அல்ல என்பதற்கு பல்வேறு புள்ளி விவரங்களை அடுக்கி நிதியமைச்சர் விளக்கமளித்தார். நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்துக்கு பதில் அளித்து சட்டப்பேரவையில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் உரையாற்றி வருகிறார். அப்போது பேசிய அவர்,


* வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் தமிழ்நாட்டில் 52 சதவீத இளைஞர்கள் உயர்கல்வி பயில்கின்றனர்.


* அரசு வழங்கிய வீடுகளில் வசிப்பவர்கள் வெறும் 14 சதவீதம் பேர்தான்.


* தமிழ்நாட்டில் 66 சதவீதம் குடும்பத்தினர் இருசக்கர வாகனம் வைத்துள்ளனர்.


* தமிழ்நாட்டில் 75 சதவீத குடும்பங்கள் சொந்த வீட்டில் வசித்து வருகின்றனர்.


* நகர்ப்புறங்களில் உள்ள மக்களில் 60 சதவீதம் பேரும், கிராமங்களில் உள்ளவர்களில் 90 சதவீதம் பெரும் சொந்த வீட்டில் வசிக்கின்றனர்.


* தமிழ்நாட்டில் 2.06 கோடி குடும்ப அட்டைகள் உள்ள நிலையில் 2.6 கோடி இருசக்கர வாகனங்கள் உள்ளன.


* தமிழ்நாட்டில் 50 சதவீத வீடுகளில் குளிர்சாதன பெட்டிகள் உள்ளன.


* தமிழகத்தில் ஒரே குறை ஒட்டுமொத்த உழைக்கும் வயதில் உள்ளவர்களில் 52 சதவீதம் பேருக்கு தகுதியான வேலை இல்லை என்பது தான் என்று நிதியமைச்சர் தெரிவித்தார்.



Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement