Ad Code

Responsive Advertisement

அரசுப் பணியில் இறந்த பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு பணி

 




அரசுப் பணியில் இருக்கும்போது தங்களின் குடும்பத்தை ஏழ்மையான சூழ்நிலைகளில் விட்டு இறந்த அரசுப் பணியாளர்களின் சட்டப்பூர்வமான வாரிசுதாரர்களுக்கு உதவுவதற்காக அரசால், அரசாணை (நிலை) எண்.18 தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்புத்(க்யூ1)துறை, நாள்.23.01.2020-இல் உள்ள வழிகாட்டு நெறிமுறைகளின்படி கருணை அடிப்படையில் பணிநியமனம் வழங்கப்பட்டு வருகிறது. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையில் பணிபுரிந்து பணியிடையே காலமான அரசு ஊழியர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் பணி நியமனம் வேண்டி காத்திருப்போர் பட்டியலிலிருந்து முதுநிலை மற்றும் கல்வித்தகுதியின் அடிப்படையில் 2019-2020 மற்றும்   2020-2021 ஆம் ஆண்டிற்கான காலிப்பணியிட மதிப்பீட்டின் படி 14 இளநிலை உதவியாளர் மற்றும் 7 தட்டச்சர் பணியிடத்திற்கு தகுதியானவர்களுக்கு 21.01.2022 அன்று ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சரால் பணியிடம்  வழங்கப்பட்டது.





Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement