Ad Code

Responsive Advertisement

கரோனா அச்சமா? இந்த செயலியை பதிவிறக்கம் செய்து கொள்ளலாமே

 



கரோனா பாதித்தவர்கள், வீட்டிலிருந்தே மருத்துவ சேவையைப் பெறும் வகையில் உருவாக்கப்பட்டது வைட்மெட் செயலி.


கரோனா இரண்டாம் அலையின்போது அறிமுகப்படுத்தப்பட்ட இந்த செயலி வாயிலாக, சென்னையில், நாள்தோறும் சுமார் 150 அழைப்புகள் வரை மேற்கொள்ளப்பட்டு, பலரும் பயன்பெற்றனர். ஆனால், தற்போது, கரோனா பாதிப்பு அதிகரித்தாலும், இந்த செயலியை பலரும் கண்டுகொள்வதில்லை.


2021ஆம் ஆண்டு மே மாதம் இந்த செயலி அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த செயலி மூலமாக, நோயாளிகள் நேரடியாக மருத்துவர்களை சந்தித்து மருத்துவ ஆலோசனைப் பெறலாம். 


கரோனா இரண்டாம் அலையின் போது சுகாதாரத் துறை கடும் இன்னல்களைச் சந்தித்தவேளையில், கரோனா நோயாளிகள் வீட்டிலிருந்தே இந்த செயலி மூலம் மருத்துவ சேவையை பெறுவதற்கு வழிவகை ஏற்பட்டது.


பிறகு கரோனா இரண்டாம் அலை ஓய்ந்தபிறகு, இந்த செயலியைப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை மிகவும் குறைந்துபோனது. தற்போது நாள் ஒன்றுக்கு ஒற்றை இலக்க எண்ணிக்கையில்தான் அழைப்புகள் வருகின்றன. இந்த வைட்மெட் செயலியில் பணியாற்றும் மருத்துவக் குழுவினர், இங்கு அழைப்புகள் குறையும்போது, மத்திய அரசு அறிமுகப்படுத்திய சஞ்சீவனி செயலிக்கு வரும் அழைப்புகளுக்கு பதில் சொல்லும் பணியை மேற்கொள்வார்கள்.


எனவே தற்போது, கரோனா பாதிப்பு அதிகரித்து வரும் சூழலில், இந்த செயலி குறித்து பொதுமக்களிடையே அதிக விழிப்புணர்வு ஏற்படும்பட்சத்தில், நோயாளிகளுக்கு இந்த செயலி மூலம் வீட்டிலிருந்தே மருத்துவ சிகிச்சை பெறும் வசதி கிடைக்கும் என்பது மறுக்க முடியாத உண்மை.

அதுபோல, கரோனா அறிகுறிகள் இருப்பவர்களும் இந்த செயலி மூலம் மருத்துவ ஆலோசனையைப் பெற்று, வெளியில் நடமாடுவதைக் குறைத்துக் கொள்வதன் மூலம் தொற்று பரவுதல் கட்டுப்படுத்தப்படும் என்றும் கூறப்படுகிறது.


கரோனா பாதித்தவர்களும், அறிகுறி இருப்பவர்களும், கரோனா வந்துவிடுமோ என்ற அச்சத்தில் இருப்பவர்களும் இந்த செயலி மூலம் மருத்துவர்களை நேரடியாகத் தொடர்பு கொண்டு, உங்கள் மருத்துவ சந்தேகங்களைக் கேட்டறியலாம் என்கிறார் இந்த திட்ட மாவட்ட அதிகாரி டாக்டர் பிரதீப் செல்வராஜ். 


வீட்டுத் தனிமையில் வைக்கப்பட்டிருப்பவர்களும், கரோனா குறித்த சந்தேகங்களை எங்களைத் தொடர்பு கொண்டு கேட்டறியலாம் ஒரு வேளை யாருக்கேனும் கரோனா நோயாளிகள் மையம் அல்லது மருத்துவமனையில் அனுமதி  தேவைப்படின், அதற்கும் ஏற்பாடு செய்து கொடுக்கிறோம் என்கிறார்.



Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement