ஜெர்மனியில், ஜோசுவா என்ற 7 வயது சிறுவன், கடுமையான உடல்நலப் பாதிப்பால் அவதிப்பட்டு வரும் நிலையில், அவனுக்கு பதிலாக அவதார் என்ற ரோபோ, பள்ளிக்குச் சென்று, அவன் வீட்டிலிருந்து பாடம் படிக்க உதவி செய்து வருகிறது.
ஜோசுவா அமரும் இடத்தில் அமர்ந்து கொண்டு பாடங்களை கவனிக்கும் அவதார் ரோபோ, ஆசிரியர் கேட்கும் கேள்விகளுக்கு ஜோசுவா பதிலளிக்க உதவுகிறது. வீட்டிலிருந்தே ஜோசுவா தனது பாடங்களை படித்து வருகிறான்.
இது குறித்து மகிழ்ச்சி தெரிவிக்கிறார் ஜோசுவா பயிலும் பஸ்டிப்ளூம் பள்ளியின் தலைமையாசிரியர் உடே வின்டர்பெர்க்.
கடுமையான நுரையீரல் பாதிப்பு காரணமாக, கழுத்தில் குழாய் இணைக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் ஜோசுவா, பள்ளிக்குச் செல்ல முடியாத நிலையில் இருப்பதாக அவரது தாய் சிமோனி கூறுகிறார். சிறுவனின் கல்விக்காக, உள்ளூர் அமைப்பு ஒன்று இதற்கான செலவை ஏற்றுக் கொண்டுள்ளது.
0 Comments