சின்னசேலம் தனியார் பள்ளி மாணவன் இறப்பு வழக்கில் விழுப்புரம் நீதிமன்றத்தில் டிஐஜி ராதிகா சாட்சியமளித்தார். வழக்கில் விசாரணை அதிகாரியாக இருந்த டிஐஜி ராதிகா விழுப்புரம் குற்றவியல் நீதிமன்றத்தில் சாட்சியமளித்துள்ளார். டிஐஜி ராதிகா 2 மணி நேரத்திற்கும் மேலாக அளித்த சட்டசியத்தை நீதிபதி கோபிநாதன் பதிவு செய்தார். 1999-ல் பள்ளியில் உள்ள குடிநீர் தொட்டியில் தவறி விழுந்து 5-ம் வகுப்பு மாணவன் சுரேஷ் உயிரிழந்தார். சம்பவத்தை மறைக்க மாணவன் சடலத்தை ஆத்தூர் அருகே வயல்வெளியில் பள்ளிநிர்வாகதினர் வீசினர். சம்பவத்தை மறைத்த தலைமை ஆசிரியை பிரகாசி, பள்ளி ஊழியர்கள் என் 3 பேரை சிபிசிஐடி 2016-ல் கைது செய்தது. ஊழியர்கள் மற்றும் இறந்த நிலையில் தலைமை ஆசிரியைக்கு எதிராக வழக்கு நடந்து வருகிறது.
0 Comments