Ad Code

Responsive Advertisement

கோவை மாணவி துன்புறுத்தல் சம்பவம் - அறிக்கை அளிக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவு..!!

 





கோவை மாணவி பாலியல் துன்புறுத்தல் சம்பவம் தொடர்பாக முதன்மைக் கல்வி அலுவலர் விசாரணை நடத்தி அறிக்கை அளிக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. கோவையில் பள்ளி ஆசிரியர் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததால் மனமுடைந்த மாணவி தற்கொலை செய்து கொண்டார். முன்னதாக மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவத்தில் அந்த மாணவி முன்னாள் படித்த தனியார் பள்ளியின் இயற்பியல் ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி கைது செய்யப்பட்டார்.


இந்த சம்பவத்தில் மாணவி புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்காத காரணத்தினால் அப்பள்ளியின் முன்னாள் முதல்வர் மீரா ஜாக்சனும் கைது செய்யப்பட்டு அவர் மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதனையடுத்து நேற்று ஆர்.எஸ்.புரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இருந்து அவர் நீதிபதி இல்லத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு பின்னர் சிறையில் அடைக்கப்பட்டார்.


இந்த வழக்கில் கிடைக்கப்பெற்றுள்ள ஆதாரங்களை வைத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் கோவை மாணவி பாலியல் துன்புறுத்தல் சம்பவம் தொடர்பாக முதன்மைக் கல்வி அலுவலர் விசாரணை நடத்தி அறிக்கை அளிக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.


ஏற்கனவே பாலியல் துன்புறுத்தல்களை தடுப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. மேலும், கோவை போன்ற சம்பவங்களை தடுப்பது தொடர்பாக வருகின்ற 23ம் தேதி முதன்மை கல்வி அலுவலர்கள் கூட்டம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.




Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement